மத்திய அரசுத் துறைகளில் அதிகாரி வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு 

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய அரசுத் துறைகளில் அதிகாரி வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு 

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Assistant Commissioner (Crops)  
காலியிடங்கள்: 01 (மாற்றுத் திறனாளிகளுக்கு) 
கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம் (Agricultural Economics or Agricultural Extension or Agronomy or Entomology or Nematology or Genetics and Plant Breeding or Agriculture Botany or Plant Bio-technology or Plant Pathology or Plant Physiology or Seed Science and Technology or Soil Science   and Agricultural Chemistry) பெற்றிருக்க வேண்டும். விவசாயத்தில் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். 
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 
பதவி: ஏரோநாட்டிகல் ஆபிஸர்  

காலியிடங்கள்: 12 
கல்வித் தகுதி: Aeronautical or Electrical or Electronics or Mechanical or Metallurgical Engineering பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விமான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுத் துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: சயின்டிஸ்ட் "பி' (மெக்கானிக்கல்)  
காலியிடங்கள்: 2 
கல்வித் தகுதி: இயற்பியலில் முதுகலைப் பட்டம் அல்லது மெக்கானிக்கல்/ மெட்டலர்ஜிகல் துறையில் பி.ஈ/ பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 
பதவி: Junior Scientific Officer (Explosive)  

காலியிடங்கள்: 2 (மாற்றுத் திறனாளிகளுக்கு 
கல்வித் தகுதி: வேதியியல்/ தடய அறிவியல் பிரிவில் முதுகலைப் பட்டத்துடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. 
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

பதவி: Assistant Chemist  
காலியிடங்கள்: 11  
கல்வித் தகுதி: வேதியியலில் முதுகலைப் பட்டம் அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பி.ஈ. அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தில், Online Recruitment Application (ORA) பக்கத்துக்குச் சென்று புகைப்படம், கையெழுத்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துவிட்டு, ஆன்லைனிலேயே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். பின்னர் விண்ணப்பப் படிவத்தைப்  பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.02.2018. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://upsc.gov.in/sites/default/files/Advt_02_2018_Engl.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com