வேலை வேண்டுமா..? தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் 1573 உதவியாளர் வேலை 

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 1573 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக
வேலை வேண்டுமா..? தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் 1573 உதவியாளர் வேலை 

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 1573 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது. 

தற்போது தஞ்சாவூர், கரூர், திருவண்ணாமலை, வேலூர், கன்னியாகுமாரி, நீலகிரி, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, விருதுநகர், திருவாரூர் போன்ற மாவடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, விழுப்புரம், சேலம், திருப்பூர் மாவடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: உதவியாளர்

மாவட்ட வாரியான காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  

* தஞ்சாவூர் - 201
கடைசி தேதி: 26.02.2018

* கரூர் - 24
கடைசி தேதி: 22.02.2018

* திருவண்ணாமலை - 57
கடைசி தேதி: 26.02.2018

* வேலூர் - 67 
கடைசி தேதி: 22.02.2018

* கன்னியாகுமாரி - 48
கடைசி தேதி: 26.02.2018

* நீலகிரி - 17
கடைசி தேதி: 21.02.2018 

* ராமநாதபுரம் - 18
கடைசி தேதி: 21.02.2018

* தேனி - 34
கடைசி தேதி: 22.02.2018

* திருநெல்வேலி - 62
கடைசி தேதி: 23.02.2018

* விருதுநகர் - 43
கடைசி தேதி: 26.02.2018

* திருவாரூர் - 43
கடைசி தேதி: 27.02.2018

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கால்நடைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அருந்தியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர் 35க்குள்ளும், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) 32க்குள்ளும், பொதுபிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரர்களின் சான்று சரிபார்க்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின்  மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை அலுலவலகத்துக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.5க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை (Envelope) இணைத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் இணையதளங்களில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்கள் அறிய தஞ்சாவூர் மாவட்டம் http://www.thanjavur.nic.in/pdf/AHA.pdf,  கரூர் மாவட்டம் http://karur.tn.nic.in/departments/AH_Application.pdf, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.tiruvannamalai.tn.nic.in/aha.pdf,  வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://vellore.nic.in/edocs/Ah-asst%20Vacancy.pdf, கன்னியாகுமார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.kanyakumari.tn.nic.in/AH%20assistant.pdf, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://nilgiris.nic.in/images/ah.pdf, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.ramnad.tn.nic.in/pdf/animal_husbandry.pdf, தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.theni.tn.nic.in/pdfs/ahasst1.pdf,  திருநெல்வேலி மாவட்டத்தை தேர்ந்தவர்கள் http://www.nellai.tn.nic.in/pdf/animhustnv.pdf, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.tiruvarur.tn.nic.in/documents/animal2018.pdf, http://virudhunagar.tn.nic.in/ என்ற அதிகார்ப்பூர்வ இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம். 

இதற்கான விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் இணையதளங்களில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com