ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ் பணிகளுக்கான 782 காலியிடங்கள் அறிவிப்பு

சிவில் சர்வீஸ் எனப்படும் இந்திய குடிமையியல் பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் பணிகளுக்கான 782 இடங்களுக்கான அறிவிப்ப்பை மத்திய
ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ் பணிகளுக்கான 782 காலியிடங்கள் அறிவிப்பு

சிவில் சர்வீஸ் எனப்படும் இந்திய குடிமையியல் பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் பணிகளுக்கான 782 காலியிடங்களுக்கானஅறிவிப்ப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Civil Services 

காலியிடங்கள்: 782

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.08.2018 தேதியின் படி 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 32க்குட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.08.1986 மற்றும் ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு பிரிவுக்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையிலும், குறிப்பிட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் நேரடியாக செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி., பெண்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் பகுதி 1, பகுதி 2 என இரு நிலைகளில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்னபாக விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றுகளை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான இடத்தில் அவற்றை பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2018

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 03.06.2018

முதன்மைத் தேர்வு (மெயின் எக்ஸாம்) 2018 செப்டம்பர் மாதம் நடைபெறலாம் என உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/sites/default/files/Notification_CSP_2018_Engl.pdf  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com