வேலை வேண்டுமா..? திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தில் வேலை

திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் காஞ்சிபுரம்
வேலை வேண்டுமா..? திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தில் வேலை

திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரிய கீழ்கண்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி: மருத்துவர் அலுவலர்
காலியிடங்கள்: 10
தகுதி: எம்.பி.பி.எஸ் அல்லது அதற்கு இணையான பட்டப் படிப்பு இந்திய மருத்துவக் கழகத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் 
காலியிடங்கள்: 01
தகுதி: முதுகலை வணிக மேலாண்மை, சுகாதார நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் 
காலியிடங்கள்: 03
தகுதி: மேல்நிலை பள்ளிப்படிப்புடன் இளங்கங்கலை பட்டம், அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர் படிப்புடன் அரசு அங்கீகாரம் உள்ள பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சி அல்லது சுகாதார ஆய்வாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: சுகாதார பார்வையாளர் 
காலியிடங்கள்: 23
இளங்கலை பட்டம் அல்லது மேல்நிலை பள்ளிப்படிப்பு மற்றும் பல்நோக்கு சுகாதாரம் மகளிர் சுகாதார பார்வையாளர், மகப்பேறு துணை செவிலியராக பணியாற்றிய அனுபவம், சுகாதாரக் கல்வி, ஆலோசகர் படிப்பு, காசநோய் சுகாதாரப் பார்வையாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஆய்வக நுட்புநர்
காலியிடங்கள்: 11
தகுதி: 10, பிளஸ் டூ அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி மற்றும் மருத்துவ கல்வி இயக்குநரால் கையொப்பமிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுக்கூட பயிற்சி பட்டம் அல்லது பட்டயம், கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: தகவல் பதிவு கணினி பொறியாளர் 
காலியிடங்கள்: 02
தகுதி: 10, பிளஸ் டூ மற்றும் கணினி இயக்குதலில் பட்டய படிப்பு சான்று அல்லது அதற்கு இணையான தொழிற்கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கணினி தொழில்நுட்ப பயிற்சி, நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். கணினியில்(Ms word, Excel, Powerpoint) மற்றும் புள்ளி விவரங்களில் போதிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஆலோசகர் 
காலியிடங்கள்: 02
தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு (சமூக பணி, சமூகவியல், உளவியல்), கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: ஒப்பந்த அடிப்படையிலான மேற்கண்ட பணியிடங்களுக்கு 01.07.2017ன்படி 18 முதல் 65க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு சுய விலாசமிட்ட ரூ.10 மதிப்புள்ள அஞ்சல்வில்லை ஒட்டிய உறையுடன், மேல் உறையின் அந்த பணியின் பெயரை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.03.2018
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்ள் www.kanchi.nic.in என்ற மாவட்ட ஆட்சித் தலைவரின் இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: துணை இயக்கநர் - மருத்துவப் பணிகள், (காசநோய்) மாவட்ட காசநோய் மையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம், காஞ்சிபுரம் - 631502

மேலும் முழுமையாங்கள் விவங்களுக்கு http://www.kanchi.nic.in/Pressrelease/application_ddhs.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com