வேலை... வேலை... வேலை... பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை

முப்படைகளில் ஒன்றான விமானப்படைப்பிரிவில் கமிஷன்டு ஆபிசார் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான
வேலை... வேலை... வேலை... பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை

முப்படைகளில் ஒன்றான விமானப்படைப்பிரிவில் கமிஷன்டு ஆபிசார் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண்-பெண் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: DAVP 10801/11/0062/1718

பணி:  Commissioned Officers

வயது வரம்பு: பிளையிங் பிரிவில் சேரும் விண்ணப்பதாரர்கள் 1.1.2019 தேதியின்படி 20 முதல் 24 வயதுடையவராகவும், பைலட் பயிற்சி பெற்றவர்கள் 26 வயதுடையவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். டெக்னிக்கல் பிரிவு மற்றும் கிரவுண்ட் டியூட்டிக்கு விண்ணப்பிப்பவரகள் 20 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளையிங் பிரிவு பணிக்கு 3 ஆண்டு கால அளவு கொண்ட பட்டப்படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 10, 12-ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். பி.இ., பி.டெக். படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஏரோனாட்டிகல் என்ஜினீயரிங் மற்றும் இது சார்ந்த பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை படித்தவர்கள் டெக்னிக்கல் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம். பல்வேறு விதமான பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, முதுகலை டிப்ளமோ, சி.ஏ. போன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் பணிகள் காத்திருக்கின்றன. 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் அந்தந்த பணிக்கான உயரம், எடை, மார்பளவு, பார்வைத்திறன் மற்றும் உடல் நலம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். விமானப்படை பொது சேர்க்கைத் தேர்வு (அப்கேட்) எனப்படும் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி, உடற்திறன் சோதித்தல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்காணல் ஆகியவை இதில் அடங்கும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு குறிப்பிட்ட காலம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பணி நியமனம் அளிக்கப்படும். 

கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.careerairforce.nic.in என்ற இணையதள மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.careerairforce.nic.in அல்லது https://afcat.cdac.in அல்லது http://www.careerairforce.nic.in/tview3.asp?link_temp_id=535&lid=230 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com