ராணுவ ஆயுதக் கிடங்கு டெப்போக்களில் வேலை

ராணுவ ஆயுதக் கிடங்கு டெப்போக்களில் காலியாக உள்ள 465 உதவியாளர், லோயர் டிவிஷன் கிளார்க், தீயணைப்பு வீரர், டிரேட்ஸ்மேன், எம்.டி.எஸ்.

ராணுவ ஆயுதக் கிடங்கு டெப்போக்களில் காலியாக உள்ள 465 உதவியாளர், லோயர் டிவிஷன் கிளார்க், தீயணைப்பு வீரர், டிரேட்ஸ்மேன், எம்.டி.எஸ். பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வயதுவரம்பு: 27 வயதுக்குட்பட்டவர்களும், சில பணியிடங்களுக்கு 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தகுதி: 10, +2, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் டிப்ளமோ என்ஜினீயரிங், டிராப்ட்ஸ்மேன் சிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றவர்கள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு, உடல்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://indianarmy.nic.in/writereaddata/documents/27%20FAD%20ENGLISH%20221217.pdf  மற்றும் https://indianarmy.nic.in/writereaddata/documents/Advt%2036%20FAD%20English%20151217.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com