வேலை வேண்டுமா..? அழைக்கிறது கனிமவள மேம்பாட்டு நிறுவனம்

பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிமவள மேம்பாட்டு நிறுவனத்தில் (என்எம்டிசி) பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள 101 பணியிடங்களுக்கான
வேலை வேண்டுமா..? அழைக்கிறது கனிமவள மேம்பாட்டு நிறுவனம்

பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிமவள மேம்பாட்டு நிறுவனத்தில் (என்எம்டிசி) பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள 101 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஆன்லைன் மற்றும் அஞ்சல் மூலம் வரும் 27க்குள்ளும் விண்ணப்பிக்கலாம்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

1. Maintenance Assistant (Mech)(Trainee )(RS-02) - 45 
2. Maintenance Assistant (Elect) (Trainee) (RS-02) 47
3. Assistant Physiotherapist Grade- III (Trainee) (RS-03) - 01
4. Assistant Lab Technician Grade- III (Trainee) (RS-03) - 01
5. Assistant Pharmacist Grade- III (Trainee) (RS03) - 01
6. Assistant Dietician GradeIII (Trainee) (RS-03) - 01
7. HEM (MECH) Grade –III (Trainee) /MCO Grade –III (Trainee) (RS-04) - 05

வயது வரம்பு: 8.5.2015 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பணிகளுக்கேற்ப அந்தந்த துறைகளில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு முடித்தவர்களும் அந்த தகுதிக்குரிய பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் பணித்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  www.nmdc.co.in இணையதளத்தில் careers பக்கத்தின் மூலம் ஆன்லைன் மூலம், அஞ்சல் வழியிலும் விண்ணப்பிக்கலாம். ஏதாவதொரு வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.1.2018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No. 1352 Post Office, Humayun Nagar, Hyderabad& 500028, Telengana.
அஞ்சல் வழியில் விண்ணப்பக் கடித உறையில் எம்ப்ளாய்மென்ட் நோட்டிபிகேஷன் நம்பர் (04/ 2017), தாங்கள் விண்ணப்பிக்கும் பணி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடப்படாமல் அனுப்பப்படும் விண்ணப்பக் கடிதங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150 செலுத்த வேண்டும். அந்த விண்ணப்பக் கட்டணம் திருப்பி வழங்கப்படாது. எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் படை வீரர்களுக்கு விண்ணப்பக் கட்டணச் சலுகை அளிக்கப்படும். ஆனால் அதற்கு உரிய சான்றிதழை இணைத்து அனுப்பவேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nmdc.co.in/Docs/Careers/complete-notification-kirandul.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com