விண்ணப்பித்துவிட்டீர்களா..? சிண்டிகேட் வங்கியில் 500 புரபஷெனரி அதிகாரி வேலை

இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் இந்திய அரசுக்கு சொந்தமான பழமையான மற்றும் மிகப்பெரிய வணிக
விண்ணப்பித்துவிட்டீர்களா..? சிண்டிகேட் வங்கியில் 500 புரபஷெனரி அதிகாரி வேலை

இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் இந்திய அரசுக்கு சொந்தமான பழமையான மற்றும் மிகப்பெரிய வணிக வங்கிகளில் ஒன்று சிண்டிகேட் வங்கி. இது கனரா இன்டஷ்ட்ரியல் மற்றும் சிண்டிகேட் லிமிடெட் என்ற பெயரில், டி. எம். ஏ. பாய், உபேந்திரா பாய், மற்றும் வாமன் ஸ்ரீநிவாஸ் குத்வா ஆகியோர்களால் 1925-ஆம் ஆண்டில் உடுப்பியில் தொடங்கப்பட்டது. பின்னர் 1969 ஜூலை 19-ஆம் தேதி தேசியமயமாக்கப்பட்ட 13 வங்கிகளில் சிண்டிகேட் வங்கியையும் தேசியமயமாக்கியது இந்திய அரசு.

மணிப்பாலை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கியில் (Syndicate Bank) காலியாக உள்ள 500 புரபஷெனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடமிருந்து வரும் 17க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 500

பணி: Probationary Officer (PO)

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.10.2017 தேதியின்படி 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:  www.syndicatebank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் உத்தேச தேதி: 18.02.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.syndicatebank.in/RecruitmentFiles/PGDBF_ADVERTISEMENT_2018-2019_27122017.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com