ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு

விளையாட்டு துறைகளில் சிறந்த வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு

விளையாட்டு துறைகளில் சிறந்த வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் சிறந்த வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 21

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Sports Quota - 21
1. Athletics - 09
2. Basket Ball (Women) - 03
3. Shuttle Badminton - 02
4. Cycling - 02
5. Volley Ball - 02
6. Water Polo - 03

தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ, +2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட விளையாட்டு துறைகளில் சிறப்பிடம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1900, 2000

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை: www.swr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
"The Assistant Personnel Officer I HQ, Railway Recruitment Cell, 2nd floor, Old G.M.'s Office building, Club Road, Hubli - 580 023" 

அல்லது Office of the Railway Recruitment Cell, 2nd floor, Old G.M.'s Office building, Club Road, Hubli - 580 023".

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.02.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.swr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com