குரூப் 4 தேர்வுக்கூட நுழைவுச் சீட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குரூப் 4 தேர்வுக்கூட நுழைவுச் சீட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 9 ஆயிரத்து 351 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. எழுத்துத் தேர்வு வரும் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

301 தாலுகா மையங்களிலும் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்காக 20.8 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net, www.tnpscexams.in வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பப் பதிவு எண் அல்லது பயனாளர் குறியீடு எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. 

தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக் கட்டணமான ரூ.100-ஐ செலுத்தியதற்கான ரசீது நகலுடன் விண்ணப்பதாரர் பெயர், விண்ணப்பப் பதிவு எண், தேர்வுக் கட்டணம், செலுத்திய இடம் (அஞ்சலகம்-வங்கி) ஆகிய விவரங்களை, தேர்வாணையத்தின் மின்னஞ்சல் contacttnpsc@gmail.com என்ற முகவரிக்கு வரும் 6-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதன்பிறகு அனுப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com