துணை ராணுவத்தில் மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுதில்லியை தலைமை இடமாகக் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான சாஸ்திரா 
துணை ராணுவத்தில் மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுதில்லியை தலைமை இடமாகக் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான சாஸ்திரா சீமா பல் (Sashastra Seema Bal) படைப்பிரிவில் காலியாக உள்ள 91 மருத்துவ அதிகாரிகள் மற்றும் சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கான ஒப்பந்த அடிப்படையிலான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 91

பணி: மருத்துவ அதிகாரி - 74

பணி: ஸ்பெஷலிஸ்ட் - 17

தகுதி: மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் குறிப்பிட்ட மருத்துவ பிரிவுகளில் முதுநிலை மருத்துவம், முதுநிலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 67க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 2018 பிப்ரவரி 5 மற்றும் 6

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssb.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com