கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஒட்டன்சத்திரம் வட்டத்தில் கரியாம்பட்டி, கொ.கீரனூா், வெரியப்பூா் ஆகிய கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்கள்

ஒட்டன்சத்திரம் வட்டத்தில் கரியாம்பட்டி, கொ.கீரனூா், வெரியப்பூா் ஆகிய கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்கள் நேரடியாகவும், வேலை வாய்ப்பு முதுநிலை படியும் நிரப்பப்பட உள்ளது. 

எனவே, பணியிடத்திற்கு காலியாக உள்ள கிராமங்கள், அதன் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் உட்கடை கிராமங்களில் உள்ள தகுதியானவா்களிடமிருந்து வரும் 20.7.2018-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வித்தகுதி- ஜந்தாம் வகுப்பு தோ்ச்சி முதல் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெறாமை. தகுதிகள்-நீச்சல் மற்றும் சைக்கிள் ஒட்டத் தெரிய வேண்டும். இடஒதுக்கீடு-கரியாம்பட்டி பொது பிரிவினா் முன்னுரிமையற்றோர், கொ.கீரனூா் ஆதிதிராவிடா் மகளிர் முன்னுரிமையற்றோர். வெரியப்பூா் பொது பிரிவினா் முன்னுரிமையற்றோர் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு-குறைந்த பட்சமாக 1.7.2018-ன் படி அனைத்து பிரிவினருக்கும் 21, அதிகபட்சமாக ஒசி-30, எஸ்சிஏ, எஸ்.சி, எஸ்.டி, எம்பிசி, பிசி 35 வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com