டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 32 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 32 ஆக உயர்த்தி அரசாணை
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 32 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!


சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 32 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

குரூப்-1 தேர்வு மூலம் நிரப்பப்படும் டிஎஸ்பி, துணை ஆட்சியர் பணிக்கான வயது வரம்பு உயர்த்தி அறிவிக்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், இன்று அதற்கான அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

இடஒதுக்கீடு பிரிவினரான எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35-இல் இருந்து 37 ஆகவும், பொதுப்பிரிவினருக்கு 30-இல் இருந்து 32 ஆகவும் உயர்த்தி இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு மூலம் குரூப்-1 தேர்வை எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com