சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிந்து 8 மாதங்களாக தேர்வு முடிவுக்காக காத்திருந்த தேர்வு முடிவுகளை இன்று
சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிந்து 8 மாதங்களாக தேர்வு முடிவுக்காக காத்திருந்த தேர்வு முடிவுகளை இன்று அதிகாரப்பூர்வ இணையத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 

உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய சிறப்பாசிரியர் பணிகளில் 1,325 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 23 -ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வை 35,000-க்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், தேர்வு முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் முடிவுகள் வெளியாகாததால் 35 ஆயிரம் தேர்வர்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர். 

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2017 -ஆம் ஆண்டு தேர்வுக்கால அட்டவணையின்படி, சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், "கீ ஆன்சர்' வெளியிட்டு 7 மாதங்களுக்கு மேல் ஆகியும் தேர்வு முடிவுகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை என தேர்வெழுதியோர் கவலை தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 

தேர்வு எழுதியவர்கள் இணையதளத்தில் சென்று முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்றும் இறுதி விடைகுறிப்பும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com