மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் நீக்கப்படவில்லை: பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

சிபிஎஸ்இ மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் நீக்கப்படவில்லை என்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தகுதித் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் நீக்கப்படவில்லை: பிரகாஷ் ஜவடேகர் பேட்டி


சிபிஎஸ்இ மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் நீக்கப்படவில்லை என்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தகுதித் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற வேண்டுமானால் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சிஇடிஇ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்நிலையில், அந்த தேர்விற்கான மொழித் தேர்வில் கடந்த ஆண்டு வரை 20 மொழிகளில் தேர்வுகளை எழுதலாம் என்ற நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட 17 மொழிகளை நீக்கி உள்ளதாகவும், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய 3 மொழிகளில் ஏதேனும் இரு மொழிகளைத் தேர்ந்தெடுத்து தேர்வுகளை எழுதலாம் என தகவல் வெளியானது. இதற்கு தேர்வர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 

இந்நிலையில், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com