ரயில்வேயின் 26,502 லோகோ பைலட், டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பிக்க மார்ச்.31 கடைசி

ரயில்வேயின் 26,502 லோகோ பைலட், டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பிக்க மார்ச்.31 கடைசி

இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் 2018-ஆம் ஆண்டிற்கான 26 ஆயிரத்து 505 உதவி லோகோ பைலட், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை

இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் 2018-ஆம் ஆண்டிற்கான 26 ஆயிரத்து 505 உதவி லோகோ பைலட், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் மார்ச் 5-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேற்கண்ட பணியிடங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில்வே துறையில் காலியாக உள்ள 26 ஆயிரத்து 502 உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி. அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட ஐ.டி.ஐ.களில் படித்திருக்க வேண்டும். அல்லது என்.சி.வி.டி. வழங்கிய தேசிய அப்ரண்டிஸ் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள், 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணியிடங்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.19 ஆயிரத்து 990 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

இதற்கான எழுத்துத் தேர்வை அவரவர்களின் தாய்மொழியிலேயே எதிர்கொள்ளும் வகையில், இதுவரை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அமைந்திருந்த வினாத்தாள், தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் தேர்வுக்கான கேள்வித்தால் வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான எழுத்துத் தேர்வை ஹிந்தி, ஆங்கிலம், உருது, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா. கொங்கனி, மலையாளம், மணிபூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாப், தமிழ், தெலுங்கு ஆகிய 15 மொழிகளில் கேள்வித்தாள் அமைந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் 2 ஆண்டுகள் கூடுதலாக தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொது பிரிவினர், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் என அனைவருக்கும் 2 ஆண்டுகள் கூடுதலாக தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு முன்பு தேர்வு கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பித்தவர்களுக்கு, தேர்வுக்கான கட்டணம் ரூ.100 மட்டும் எடுத்துக்கொண்டு, மீதம் ரூ.400 திரும்ப வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில்வே பணிக்கு ஒரே நேரத்தில் லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதால் கையில் இருக்கும் இந்த வாய்ப்பை கைநழுவ விடாமல் இளைஞர்கள் பயன்படுத்தி பயன்பெற வாழ்த்துக்கள்.

இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மார்ச் 31க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வயதுவரம்பு சலுகை, தகுதிகள், தேர்வு திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rrbchennai.gov.in/downloads/cen-012018/detailed-cen-012018.pdf  என்ற அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com