எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 755 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம். புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின்
எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 755 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம். புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மையத்தில் நிரப்பப்பட உள்ள 755 அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டன்ட், சீனியர் நர்சிங் ஆபீஸர் மற்றும் நர்சிங் ஆபீசர் பணியிடங்களுகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு பி.எஸ்சி செவிலியர் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 755

பணி: Assistant Nursing Superintendent  - 28
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

பணி: Senior Nursing Officer (Staff Nurse Grade-I) - 127 
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800

தகுதி: நான்து ஆண்டு பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு, 2 ஆண்டு சான்றிதழ் படிப்புடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 6 மற்றும் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Nursing Officer (Staff Nurse Grade-II) - 600
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600

தகுதி: நர்சிங் பிரிவில் 4 ஆண்டு பி.எஸ்சி பட்டம், முதுகலை பட்டம் மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்தியன் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு விவரங்களை இணையத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டன்ட் பணிக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சீனியர் நர்சிங் ஆபீசர், நர்சிங் ஆபீசர் பணிக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.aiimsraipur.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.aiimsjodhpur.edu.in/PDF/Advertisement%20for%20Nursing%20Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com