மத்திய அரசில் 8,10, ஐடிஐ, பட்டதாரிகளுக்கு கொட்டிக் கிடக்கிறது வேலை: இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக பல ஆயிரக் கணக்கான பணியிடங்களுக்கான அறிவிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசில் 8,10, ஐடிஐ, பட்டதாரிகளுக்கு கொட்டிக் கிடக்கிறது வேலை: இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக பல ஆயிரக் கணக்கான பணியிடங்களுக்கான அறிவிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணியிடங்களுக்கு மாநில பணிக்காக காத்திருக்கும் தகுதியான இளைஞர்களும் விண்ணப்பித்து பயனடையலாம். தற்போது அனைவராலும் இஸ்ரோ என அழைக்கப்படும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் ‘ஸ்பேஸ் அப்ளிகேசன் சென்டர்’ நிறுவனத்தில் காலியாக உள்ள ‘டெக்னீசியன்-பி’ மற்றும் சயின்டிஸ்ட்/என்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Technician ‘B’ (Fitter) - 14
பணி: Technician ‘B’(Machinist) - 04
பணி: Technician ‘B’(Turner) - 01]
பணி: Technician ‘B’(Electronics) - 39
பணி: Technician ‘B’(Electronics) - 02
பணி: Technician ‘B’(LACP/AOCP) - 04
பணி: Technician ‘B’ (Digital Photographer)  - 01
பணி: Technician ‘B’ (RAC) - 02
பணி: Technician ‘B’ (IT/ICTSM/ITESM) - 09
பணி: Technician ‘B’ (CHNM) - 02

பணி: Scientific Assistant –A (Multimedia) - 01
பணி: Scientist/Engineer-SD) - 03

வயது வரம்பு: 2.4.2018 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: டெக்னீசியன் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். சயின்டிஸ்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் பி.இ., பி.டெக் அல்லது எம்.இ., எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 8,10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சமையல்காரர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் அந்தந்த பணிக்கு அவசியமான தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.sac.gov.in, http s ://recruitment.sac.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://recruitment.sac.gov.in/OSAR/Pdfs/0118-Part3.pdf;jsessionid=1DA9497D9211E43148E145DF8824EDA9 லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com