கணினி, ரோபாட்கள் வளர்ச்சியால் மனிதர்கள் வேலைவாய்ப்புக்கு பெரிய அச்சுறுத்தல்: ரகுராம் ராஜன் அச்சம்

ரோபாட்கள், கணினிகள் மற்றும் எந்திரங்கள் வருகைகளின் முன்னேற்றத்தின் மாற்றத்தால் அடுத்த 15 ஆண்டுகளில் மனிதர்களுக்கு
கணினி, ரோபாட்கள் வளர்ச்சியால் மனிதர்கள் வேலைவாய்ப்புக்கு பெரிய அச்சுறுத்தல்: ரகுராம் ராஜன் அச்சம்

கொச்சி: ரோபாட்கள், கணினிகள் மற்றும் எந்திரங்கள் வருகைகளின் முன்னேற்றத்தின் மாற்றத்தால் அடுத்த 15 ஆண்டுகளில் மனிதர்களுக்கு வேலை இருக்குமா? என்பதே தெரியவில்லை என்றவர் ரோபாட்கள் பயிற்சி சார்ந்த மற்றும் பயிற்சி சாராத அனைத்துப் பணிகளையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அச்சம் தெரிவித்துள்ளார்.

கேரளா அரசு சார்பில் கொச்சி நகரில் வியாழக்கிழமை நடந்த சர்வதேச டிஜிட்டல் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ரகுராம் ராஜன் இந்தியாவிற்கு தேவையான பார்வையை கோடிட்டுக் காட்டியே உரையை நிகழ்த்தினார். 

கணிகள் மற்றும் ரோபாட்களினால் ஏற்பட்டுவரும் அதிநவீன மாற்றங்கள் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகள் அனைத்தையும் பறித்துக்கொள்ளப்படலாம் என்றும் அடுத்த 15 ஆண்டுகளில் மனிதர்களின் வேலைவாய்ப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகலாம். ஏனென்றால், அனைத்து வேலை வாய்ப்புகளையும், கணினியும், ரோபாட்களும் செய்யத் தொடங்கிவிடும் என்றார். 

இந்தியாவைப் பொறுத்தவரை தொழில்நுட்பங்களைத் தேவைக்கு ஏற்றார்போல் பயன்படுத்தி, டிஜிட்டல் மாற்றத்தில் உலகளவில் சிறந்த நாடாகவே இருந்து
வருகிறது. மனிதர்களுக்குப் பதிலாக எந்திரங்கள் சில இடங்களில் ஆக்கமிரத்துக்கொண்ட போதிலும், பெரும்பாலான வேலை இழப்புகள் பறிபோய்விட்டதில்  அச்சமின்றியே செயல்பட்டு வருகிறது.

தொழிற்புரட்சி ஏற்பட்டு 200 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மனிதர்களுக்கு வேலை இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் பெரிய அளவில் விரிவடையும். அப்போது, நம்மால் ரோபாட்களை பயன்படுத்துவதையும், எந்திரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதையும், கணினிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க முடியாதது என்றார்.

இந்தியாவின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் மிகப்பெரிய அளவிலான புரட்சிக்கு தயாராக வேண்டியுள்ளது. அதற்கு கல்வி மற்றும் திறன் சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். உள் நாட்டளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும். கல்வியின் ஒவ்வொரு படி நிலையிலும் உள்ள பலவீனமான நிலைகளை கண்டறிந்து அதற்குத் தீர்வு காண வேண்டும். மேலும் வெளிநாடுகளில் இருக்கும் திறமையான இந்தியர்களை இங்கு கொண்டு வர வேண்டும்.'' என்று ராஜன் கூறினார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜன், தற்போது அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்குப்பிறகு, தற்போது நாட்டில் நடைபெற்றுள்ள வரிச்சீரமைப்பிற்கு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாவும், 10 சதவிகித வளர்ச்சி என்பதுகூட சாத்தியம்தான். ஆனால், அதற்கான வேலைவாய்ப்பை நாம் உருவாக்க வேண்டும். வேலைவாய்ப்பு இல்லாமல் போனால் வளர்ச்சி இருக்காது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com