வேலை... வேலை... வேலை... பட்டதாரிகளுக்கு தேசிய விதை கழகத்தில் வேலை 

வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய விதை கழகத்தில் காலியாக உள்ள 259 மேலாண்மை 
வேலை... வேலை... வேலை... பட்டதாரிகளுக்கு தேசிய விதை கழகத்தில் வேலை 

வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய விதை கழகத்தில் காலியாக உள்ள 259 மேலாண்மை டிரெய்னி, மனிதவள மேலாண்மை, விவசாயம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண். RECTT/1/18/NSC/2018

மொத்த காலியிடங்கள்: 259  

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Trainee - 89
சம்பளம்: மாதம் ரூ.17,578

பணி: Senior Trainee - 78
சம்பளம்: மாதம் ரூ.22,748

பணி: Management Trainee -    58
சம்பளம்: மாதம் ரூ.41,360

பணி: Diploma Trainee - 12
சம்பளம்: மாதம் ரூ.22,748

பணி: Trainee Mate     - 21
சம்பளம்: மாதம் ரூ.17,061

தகுதி: விவசாயம், மேலாண்மை, சந்தையியல், வணிக மேலாண்மை போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கான தகுதிகளையும் காண அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.525. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.05.2018. எழுத்துத் தேர்வானது காலை மற்றும் மதியம் என இரு கட்டங்களாக நடைபெறும்.  

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.indiaseeds.com/career/2018/NSC-Apr18.pdf என்ற அதிகாப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com