ரயில் நிலைய இலவச வைஃபையில் படித்து அரசு அதிகாரியாக அமரப்போகும் ரயில்வே கூலித் தொழிலாளி!

ரயில் நிலைய இலவச வைஃபையில் படித்து அரசு அதிகாரியாக அமரப்போகும் ரயில்வே கூலித் தொழிலாளி!

கேரள மாநிலம் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ள ஸ்ரீநாத், இலவச வைஃபை மூலம் பாடங்களை படித்து

கேரள மாநிலம் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ள ஸ்ரீநாத், இலவச வைஃபை மூலம் பாடங்களை படித்து அரசுப்பணிக்கான போட்டித்தேர்வில் வென்றுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த 2016-ஆம் ஆண்டு நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை ஏற்படுத்தப்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளம் ரயில் நிலையத்திலும் இந்த சேவை அமைக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு கனரக சாமான்களை சுமக்கும் கூலி தொழிலாளியான ஸ்ரீநாத் என்பவர் இலவச வைஃபை சேவை மூலம் அரசு அதிகாரியாக அமர உள்ளார்.

கேரள மாநிலம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் பிளஸ் டூ முடித்த பின்னர், அடுத்து படிக்க வசதி இல்லாததால் மூணாரிலிருந்து மிக அருகில் உள்ள ரயில் நிலையம் எர்ணாகுளம் ரயில் சந்திப்பு. இங்கு கனரக சாமான்களை சுமந்து செல்லும் கூலித் தொழிலாளியாக தனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார் ஸ்ரீநாத். அவர், அரசுப் பணிகளுக்காக கேரள அரசு சார்பில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் தற்போது வெற்றிபெற்றுள்ளார்.  

அரசுப் பணி தேர்வுக்காக, எர்ணாகுளம் நிலையத்தில் கிடைக்கும் இலவச வைஃபை சேவையை ஸ்ரீநாத் தனது செல்போனில் இணைத்து, ஒரு ஹெட்செட் மூலம் பாடங்களை கேட்டு படித்து வந்துள்ளார். 

மேலும் பழைய வினாத்தாள், கேள்விகள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து ஓய்வு நேரத்தில் படித்துள்ளார். இணையதளங்களில் போட்டித்தேர்வுக்கான பாடங்கள் ஆடியோவாக கிடைக்கும் நிலையில், சுமை தூக்கிச்செல்லும் போது கூட பாடங்களை மனதில் உள்வாங்கியுள்ளார். சமீபத்தில், கேரள அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வெளியிட்ட நிலையில், ஸ்ரீநாத் இந்த தேர்வில் வெற்றிபெற்றுளளார்.

நேர்முகத்தேர்விலும் ஸ்ரீநாத் வெற்றி பெற்றுவிட்டால், நில அளவைத்துறையில் கள உதவியாளர் பணி அவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த தேர்வு மட்டுமல்லாமல் ரயில்வே துறையில் நடக்க உள்ள 62 ஆயிரம் பணியிடங்களுக்கான குரூப் டி பணிக்கும் அவர் விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது வெற்றி குறித்து ஸ்ரீநாத் கூறுகையில், 'மூன்று முறை அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதியுள்ளேன். இந்தமுறைதான், ரயில் நிலையத்திலுள்ள வை-ஃபை வசதியைப் பயன்படுத்திப் படித்து, தேர்வை சந்தித்ததில் வெற்றி பெற்றுள்ளேன். 

மூட்டை தூக்கும்போது, படிப்பு சார்ந்த பதிவுகளை செல்போனில் ஓடவிட்டு, ஹெட்போனை மாட்டிக்கொண்டு உள்வாங்கிக்கொள்வேன். என்னுடைய கவனம், அதைக் கேட்பதில்தான் இருக்கும். இந்த முறையில்தான் வேலை பார்த்துக்கொண்டே படித்தேன். இரவில் ஓய்வாக இருக்கும்போது, படித்ததை நினைவுபடுத்திக்கொள்வேன் என்று தெரிவித்தார். 

2018-ஆம் ஆண்டு மே மாதம் வரை 685 ரயில் நிலையங்களில் வைஃபை சேவை தொழில்நுட்பத்தை பெற்றுளளது. இந்திய ரயில்வே 2019 மார்ச் மாதத்திற்குள் 700 கோடி ரூபாய் செலவில் 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை சேவை தொழில்நுட்பத்தை அமைக்கப்படவுள்ளது.

முதிரபுழா, நல்லதன்னி மற்றும் குண்டலி ஆறுகள் என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமே மூணாறு என்ற பெயரில் என்றழைக்கப்படுகிறது.

திறமைக்கு வறுமை ஒரு தடையில்லை என்பதை நிருபித்துள்ள ஸ்ரீநாத்துக்கு நமது வாழ்த்துக்களை உரிதாக்குவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com