ரயில்வேயில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்..! ரயில்வே பாதுகாப்பு படையில் 9739 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் சுமார் 20 ஆயிரம் காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்
ரயில்வேயில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்..! ரயில்வே பாதுகாப்பு படையில் 9739 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் சுமார் 20 ஆயிரம் காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில், இந்திய ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படையில் (ஆர்பிஎஸ்எஃப்) காலியாக உள்ள 2018-19 ஆண்டிற்கான 9 ஆயிரத்து 739 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணிக்காக காத்திருக்கும் இரு பாலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரும் ஜூன் 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்: 9739

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி: Constable & Sub Inspector

2018-19 Zone Wise RPF/ RPSF Sub Inspector (SI) Vacancy Details

RPF Zone Name  Men WomenTotal
SR, SWR, SCR  126 52  178
CR, WR, WCR, SECR           144   56 200
ER, ECR, SER, ECoR         287  112  399
NR, NER, NWR, NCR          173  69 242
NFR     30   12     42
RPSF     59    0  59
Grand Total         819  301 1120


Constable RPF Vacancies 2018

SR, SWR, SCR         804   927   1731
CR, WR, WCR, SECR  440  712 1161
ER, ECR, SER, ECoR            1287 1391 2678
NR, NER, NWR, NCR           1046  1006  2052
NFR            160 180  340
RPSF     666        0666 
Grand Total       4403    4216  8619

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஆண் விண்ணப்பத்தாரர்கள் 165 செ.மீ உயரமும், பெண் விண்ணப்பதாரர்கள் 157 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
 
தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, அளவீட்டு தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம், சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: http://constable.rpfonlinereg.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 01.06.2018 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2018/5/19/RPF_Constable_Notification.pdf  என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com