வேலை வேண்டுமா..? பேங்க் ஆஃப் பரோடா பைனான்சியல் சொல்யூஷன் நிறுவனத்தில் வேலை

பேங்க் ஆஃப் பரோடா பைனான்சியல் சொல்யூஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு
வேலை வேண்டுமா..? பேங்க் ஆஃப் பரோடா பைனான்சியல் சொல்யூஷன் நிறுவனத்தில் வேலை

பேங்க் ஆஃப் பரோடா பைனான்சியல் சொல்யூஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: ஏரியா சேல்ஸ் மேனேஜர்
கல்வித் தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எம்பிஏ அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 8 ஆண்டுகள் முன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 30 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 

பதவி: டீம் லீடர்
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் முன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 25 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: சேல்ஸ் எக்ஸிகியூடிவ் - Gradutes
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஓராண்டு முன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: சேல்ஸ் எக்ஸிகியூடிவ் - Under Gradutes
தகுதி: பட்டப்படிப்பில் முதலாமாண்டு முடித்து இன்னும் முழு படிப்பையும் முடிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறு நிதி நிறுவனங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் சேல்ஸ் பிரிவில் பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: சேல்ஸ் எக்ஸிக்யூடிவ் - Freshers
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: மேலாளர்/ உதவி மேலாளர் - புராஸஸிங் 
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஹெச். ஆர். ஆபரேஷன்ஸ் துறை/ எம்ஐஎஸ் துறை/ நிதித்துறையில் குறைந்தது 8 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள்: சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவ் -500, டீம் லீடர்ஸ்-65, ஏரியா சேல்ஸ் மேனேஜர் -25

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சுய விவரங்கள், மதிப்பெண் பட்டியல், அனுபவம் உள்ளிட்டவை அடங்கிய பயோ-டேட்டாவைத் தயாரித்து, salesforce.bob@bobcards.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பும்போது, எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறோம் என்ற விவரத்தை Subject என்னும் இடத்தில் குறிப்பிட வேண்டும்.

மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 25.05.2018.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்கள் அறிய www.bobfinancial.com/documents/Recruitment-of-Sales-Executives-TLs-ASM-Processing-Staff-BFSL.pdf என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com