ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.21 ஆயிரம் சம்பளத்தில் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் வேலை

அணுசக்தி மின் உற்பத்தியில் செயல்பட்டு வரும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ராஜஸ்தான் மாநில ராவட்பாட்டா கிளையில் காலியாக உள்ள
ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.21 ஆயிரம் சம்பளத்தில் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் வேலை

அணுசக்தி மின் உற்பத்தியில் செயல்பட்டு வரும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ராஜஸ்தான் மாநில ராவட்பாட்டா கிளையில் காலியாக உள்ள ஸ்டெபன்டரி டிரெய்னி ஆபரேட்டர், ஸ்டெபன்டரி ட்ரெய்னி மெயின்டெய்னர்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.14) கடைசி நாளாகும். 

மொத்த காலியிடங்கள்: 122

பதவி மற்றும் காலியிடங்கள்: 
1. Stipendiary trainee operator - 56
2. Stipendiary trainee maintainer - 66 

தகுதி: Fitter,  Electrician, Turner/ Machinist,  Electronics, Welder போன்ற துறைகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 14.11.2018 தேதியின்படி 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: பயிற்சிக் காலத்தில் மாதாந்திர உதவித்தொகையும், 2 ஆண்டு பயிற்சிக்குப் பின் மாதம் ரூ.21,700 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.11.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://npcilcareers.co.in/RAPSST2018/documents/Advt.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com