விண்ணப்பித்துவிட்டீர்களா..? பொதுத்துறை நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான MECON நிறுவனத்தில் காலியாக உள்ள 58 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான MECON நிறுவனத்தில் காலியாக உள்ள 58 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து இன்று மாலைக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Consultants
காலியிடங்கள்: 08

பதவி: Senior Executives
காலியிடங்கள்: 11

பதவி: Executives
காலியிடங்கள்: 39

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது ஜியாலஜி, வேதியியல் துறைகளில் எம்.எஸ்சி முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.meconlimited.co.in என்ற இமையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com