பட்டதாரிகளுக்கு தேசிய காப்பீடு நிறுவனத்தில் வேலை

தேசிய காப்பீடு நிறுவனத்தில் அளிக்கப்படவுள்ள Accounts Apprentice பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன்
பட்டதாரிகளுக்கு தேசிய காப்பீடு நிறுவனத்தில் வேலை

தேசிய காப்பீடு நிறுவனத்தில் அளிக்கப்படவுள்ள Accounts Apprentice பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Accounts Apprentice

காலியிடங்கள்: 150

வயதுவரம்பு: 1.11.2018 தேதியின்படி 21 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வணிகவியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: முதல் ஆண்டுக்கு ரூ.25,000, இரண்டாம் ஆண்டுக்கு ரூ.30,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்தவும். 

விண்ணப்பிக்கும் முறை: www.nationalinsuranceindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.11.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  file:///C:/Users/Dotcom/Downloads/RECRUITMENT%20OF%20ACCOUNTS%20APPRENTICES.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com