ஐடிஐ முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சிகளுக்கான
ஐடிஐ முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு


ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Trade Apprentices

காலியிடங்கள்: 250

டிரேடு வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Fitter -    60
2. Turner -    10
3. Machinist - 01
4. Sheet Metal Worker - 03
5. Electrician - 50
6. Mechanic R & AC     - 09
7. Motor Mechanic Vehicle - 01
8. Electronics Mechanic / R & TV - 86
உதவித்தொகை: மாதம் ரூ.8,655 வழங்கப்படும்.

9. Copa - 10
10. Welder - 10
11. Plumber - 03
12. Carpenter - 05
13. Diesel Mechanic - 02
உதவித்தொகை: மாதம் ரூ.7694 வழங்கப்படும்.

தகுதி: சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். ஏற்கனவே, தொழில்பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி 14 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பயிற்சி காலம்: Plumber, Carpenter, Dieseal Mechanic டிரேடுகளுக்கு 2 ஆண்டுகளும் மற்ற அனைத்து டிரேடுகளுக்கும் ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவு செய்த பின்பு www.ecil.co.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Deputy General Manager (CLDC), Nalanda Complex, Near TIFR Building, ECIL-Post, Hyderabad - 500 062. Telengana.

மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1pn0wJGU0Xn0pK6RABcessmqzVODSNqAa/view என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.09.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com