குரூப் 4: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கலாம்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
குரூப் 4: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கலாம்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
5,451 காலிப் பணியிடங்களுக்கான நவம்பர் 6-இல் நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வுக்காக, 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை  www.tnpscexams.net,  www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
சரியாக விண்ணப்பம் பதிந்து, உரிய கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்காதவர்கள் பணம் செலுத்துச்சீட்டின் நகலுடன் தங்களது முழு விவரங்களைக் குறிப்பிட்டு contacttnpsc@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அக்டோபர் 31-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இதுதொடர்பாக சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா எண்ணிலும், contacttnpsc@gmail.com   என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் என்று தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com