காமாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று இனிதே நடைபெற்றது. சக்தி பீடங்களில் பிரதானமானதும், பழமை வாய்ந்ததுமான காமாட்சி அம்மன் கோயிலில் கடந்த, 1995-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்படி அர்த்த மண்டபம், காயத்ரி மண்டபம், ஊஞ்சல் வசந்த மண்டபங்கள், நவராத்திரி மண்டபம், கனு மண்டபம், வாகன மண்டபம், கோசாலை, சுக்ரவார மண்டபங்கள், ரிஷிகேஷபுரம், திருமடப்பள்ளி, திருக்குளம், வெளிப்பிரகாரம், உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டன. மேலும் 4 ராஜகோபுரங்கள், வர்ணம் பூசப்பட்டு, கொடிக்கம்பத்துக்கு தங்க முலாம் பூசப்பட்டது. மூலஸ்தானத்தின் காமகோடி விமானம், ஆதிசங்கரர் விமானங்களில் தங்க கவசம் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
காமாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com