சாதவாகனர்கள் போற்றி வளர்த்த மகாராஷ்டிரத்து பைத்தானி கைத்தறிப் பட்டு!
By DIN | Published on : 05th November 2016 03:00 PM
இந்தியாவின் விலை உயர்ந்த பட்டு மற்றும் கைத்தறிப் பட்டுப்புடவைகள் வரிசையில் தமிழகத்தின் காஞ்சீவரம் பட்டுப்புடவைகளுக்கு இணையாகவும் அதைத் தாண்டியும் மதிக்கப்படக் கூடிய வகையில் இருப்பவை மகாராஷ்டிரத்தின் பைத்தானி கைத்தறிப் பட்டுப்புடவைகள். இவை மற்றெல்லா பட்டுப் புடவைகளைக் காட்டிலும் காலத்தால் முந்தியவை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் ’பைத்தன்’ எனும் இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு ரோம் நகரத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ரோமானியர்கள் இந்தப் புடவையை தங்கத்துக்கு நிகராக விலைகொடுத்து வாங்கிச் சென்றிருக்கின்றனர்.