டேனிஷ் கோட்டை

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் தரங்கப்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க்காரர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு கி.பி 1620 இல் கட்டப்பட்டது. இக்கோட்டையானது தரங்கம்பாடியின் தென்பகுதியில் அமைந்துள்ளது. மாநில தலைநகரான சென்னையில் இருந்து 283 கிமீ தொலைவில் உள்ளது. இந்தப் பகுதியின் சில குறிப்பிடத்தக்க கட்டடங்கள் என்றால் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாசிலாமணிநாதர் கோயில், 1701இல் கட்டப்பட்ட சீயோன் தேவாலயம், 1718 இல் கட்டப்பட்ட புதிய ஜெருசலேம் தேவாலயம், 1792 இல் கட்டப்பட்ட நகர நுழைவாயில், 1784 இல் கட்டப்பட்ட ஆளுநர் பங்களா, 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட கல்லறைகள் உள்ளன. கோட்டையில் உள்ளே உள்ள குடியிருப்புகளின் வாயில் மற்றும் முக்கிய தெருக்களுடன் மரக் கதவுகள் கொண்ட ஒரு சிறிய ஐரோப்பிய நகரம் போன்ற தோற்றத்தில் உள்ளது. படங்கள் உதவி : கடம்பூர் விஜயன்.
டேனிஷ் கோட்டை
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com