ஹீரோ டூயட் 125

ஹீரோ நிறுவனத்தின் புதிய டூயட் 125 ஸ்கூட்டர், ஆட்டோ எக்ஸ்போ 2018 வெளியிடப்பட்டது. ஹீரோ டூயட் 125 மாடலில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் ஹீரோவின் i3S சிஸ்டம் (Idle-Start-Stop-System) வழங்கப்பட்டுள்ளது. 125சிசி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் கொண்டுள்ளது. 8.7 பி.ஹெச்.பி. பவர் 6750 ஆர்.பி.எம். மற்றும் 10.2 என்.எம். டார்கியூ @5000 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர், சர்வீஸ் ரிமைண்டர், பாஸ் ஸ்விட்ச், வெளிப்புற ஃபியூயல் ஃபில்லிங் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. டூயட் 125 மாடல் 2018 ஆண்டு ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோ டூயட் 125
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com