புதுமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், பானு உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘பாம்பு சட்டை’. தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்படத்தின் உரிமையை பிரபல விநியோகஸ்தர் கங்காதரன் வாங்கி உள்ள நிலையில் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்க உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.