சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தின் நன்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் பத்திரிகையாளர்கள், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கு ரெமோ படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர். மேலும் சிவகார்த்திக்கேயன் பேசுகையில் எங்களை வேலை செய்ய விடுங்கள் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ள சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.