தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் வெற்றி

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில், ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் தலைமையில் நடைப்பெற்ற 2017- 2019ம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்கு விஷால் அணி, தாணு அணி, எஸ்.ஏ சந்திரசேகரன் அணி என 3 அணிகள் போட்டியிட்டன. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், டி.ராஜேந்தர், சத்யராஜ், விஷால், இயக்குநர் சுந்தர்.சி, பாண்டிராஜ் உள்ளிட்டோரும் காலையில் வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர். மேலும், முன்னணி தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, ராதிகா சரத்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் வெற்றி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com