14வது சென்னை சர்வதேச திரைப்பட விழா

14 சென்னை சர்வதேச திரைப்பட தொடக்க விழா நிகழ்ச்சி சத்யம் திரையரங்கில் டைரக்டர் பாரதிராஜா பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். ஜனவரி 5 முதல் 12 வரை ஒருவார காலத்துக்கு இந்த விழா நடைபெறவுள்ளது. 65 நாடுகளை சேர்ந்த 165 சிறந்த படங்கள் இவ்விழாவில் திரையிடப்படுகின்றன. ஐநாக்ஸ், கேசினோ, ரஷியா கலாசார மையம், பெலாஷோ தியேட்டர், ஆர்.கே.வி. திரைப்பட பள்ளி திரையரங்கம் ஆகிய 5 தியேட்டர்களில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் 12 தமிழ் படங்களும் திரையிடப்படுகின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘சூரியகாந்தி’ ஆகிய படங்களும் திரையிடப்பட்டன.
14வது சென்னை சர்வதேச திரைப்பட விழா
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com