சென்னை, தியாகராயர் நகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில், புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் நாடக நடிகர்கள் உள்பட அனைத்து நடிகர், நடிகைகளும் பங்கேற்றுள்ளனர். ரூ.26 கோடி செலவில், நடிகர் சங்கத்துக்கு நான்கு மாடிகளுடன் புதிய கட்டடமும், நடிப்புக்கான பயிற்சிக் கூடம், ஜிம், தியேட்டர் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.