யவோன் நிறுவனம் சார்பில் காவியா சினிமாஸ் வெளியிடும் படம் ‘படைவீரன்’. இதில் விஜய் யேசுதாஸ் நாயகனாகவும், அம்ரிதா நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் கல்லூரி அகில், ஜான் விஜய், கலையரசன், இயக்குனர்கள் மனோஜ்குமார், விஜய்பாலாஜி, கவிதா பாரதி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.