தமிழ் திரையுலகில் 'இயக்குனர் சிகரம்' என்று புகழப்படும் கே.பாலச்சந்தர் தமிழ்த் திரையுலகில் பல நாயக - நாயகிகளை உருவாக்கியவர். மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற 'ஒரே ஒரு பாலசந்தர்' நிகழ்ச்சியில் கே.பாலசந்தரின் சீடர்களும் திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.