பெயரிடப்படாத 'கார்த்தி 17' படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மண்குமார் தயாரிக்கிறார். இதில் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ், அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறார்.