குண்டுகள் முழங்க ஜெயலலிதாவுக்கு பிரியாவிடை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அவரது தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் இறுதிச் சடங்குகளை செய்தனர். 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முப்படை வீரர்கள், ஆளுநர் வித்யாசாகர் ராவ், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, முன்னாள் பிரதமர் தேவே கவுடா, தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த அவரது மனைவி லதா, மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா, தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, நடிகர் பிரபு, அவரது அண்ணன் ராம்குமார், நடிகர் விஜய், ஈவிகேஎஸ் இளங்கோவன், திரை பிரபலங்கள் மற்றும் பலர் இறுதி மரியாதை செலுத்தினர்.
குண்டுகள் முழங்க ஜெயலலிதாவுக்கு பிரியாவிடை
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com