முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு
By DIN | Published on : 24th July 2017 06:31 AM
வான சாஸ்திர, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை. ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் இருப்பார். சுழற்சி முறையில் ஆடி மாதத்தில் கடக ராசியில் இருப்பார். அந்த நேரத்தில் தினக்கோளான சந்திரன் கடக ராசியில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை. ஆடி அமாவாசையன்று மூதாதையர்களின் படத்துக்கு மாலை அணிவித்து, அவர்களுக்கு பிடித்தமான உணவு படைத்து அவர்களை வணங்க காகத்திற்கு உணவிட்டு விரதம் முடித்தால், கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும்.