புதிய வெஸ்பா நோட் 125 அறிமுகம்

வெஸ்பா ஸ்கூட்டரின் புதிய மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது பியாஜியோ நிறுவனம்.  இதில் 125சிசி ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 9.5 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 9.9 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும்.  முன்புறத்தில் 110-70-11 அளவுடைய ட்யூப்லெஸ் டயரும், பின்புறத்தில் 120-70-10 அளவுடைய ட்யூப்லெஸ் டயரும் பொருத்தப்ப்டடுள்ளன. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன.  வெஸ்பா நோட் 125சிசி ஸ்கூட்டர் அதிகபட்சமாக 9.5 பிஎச்பி பவரையும், 9.9 என்எம் டார்க் வழங்கும் திறனும்,  CVT கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. புதிய வெஸ்பா நோட் எடிசன் ரூ.70,285 எக்ஸ்ஷோரூம் விலையில் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
புதிய வெஸ்பா நோட் 125 அறிமுகம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com