முரசொலி பவள விழா

முரசொலி பத்திரிகை தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்தது முன்னிட்டு சென்னை முரசொலி நாளிதழ் அலுவலக வளாகத்தில் அதன் பவள விழா இரண்டு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முரசொலி அலுவலக வளாகத்தில் கண்காட்சி அரங்கம் திறக்கப்பட்டது. திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் காட்சி அரங்கை திறந்து வைத்தார். விழாவில் சன்குழும தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், ஆலந்தூர் பாரதி, சண்முகநாதன், முரசொலி ஆசிரியர் செல்வம், முன்னாள் பொறுப்பாசிரியர் சொர்ணம், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் முரசொலி பவளவிழாவில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பேசுகையில் மாற்றுக்கட்சியினரையும் விழாவுக்கு அழைத்த ஸ்டாலினின் பண்பு பாராட்டுக்குரியது என்றார்.
முரசொலி பவள விழா
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com