4 ஆண்டுகளாக காதலித்து வந்த கிரிக்கெட் வீரர் வீராட் கோலியும் - பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும், இத்தாலியில் உள்ள மிலன் நகரில் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், அனில்கபூர், ஷாகித்கபூர், அபிஷேக்பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், ஸ்ரீதேவி, பிரியங்கா சோப்ரா, பிரினிதி, நேகா துபியா ஆகியோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளளர். இந்நிலையில் வரும் 21ஆம் தேதி தில்லியிலும், 26ஆம் தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.