ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும் திரயோதசி திதியன்று மாலை வேளையில் பிரதோஷ பூஜை சிறப்பாக எல்லா சிவாலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதிலும், ஜோதிமின்னம்மை உடனாய அமிர்தகடேஸ்வரர் அருள்பாலிக்கும் திருக்கடம்பூர் ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ கால பூஜை மிகவும் சிறப்பு பெற்றது. பிரதோஷ கால பூஜையின்போது மட்டுமே உற்சவர் திருமேனியை தரிசிக்க முடியும். உற்சவர் திருமேனி மற்ற நாட்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும், நாம் காண இயலாது. திருக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள். படங்கள்: கடம்பூர் விஜயன்.