ராஜாஜி தான் வெற்றி பெற்றார்

காரியக் கமிட்டி தீர்மானத்தை ராஜாஜி தான் தயாரித்தார். என் நிலைமைதான் சரியானதென்று நான் எவ்வளவு நிச்சயமாக
ராஜாஜி தான் வெற்றி பெற்றார்

காரியக் கமிட்டி தீர்மானத்தை ராஜாஜி தான் தயாரித்தார். என் நிலைமைதான் சரியானதென்று நான் எவ்வளவு நிச்சயமாக இருந்தேனோ அதைப் போலவே ராஜாஜியும் தன் நிலைமையைப் பற்றி உறுதியாயிருந்தார். பிடிவாதம், தைரியம், வணக்கம் ஆகியவைகளால், அவர் மற்றவர்களைத் தன் பக்கம் திருப்பி விட்டார். சர்தார் பட்டேலை அவர் திருப்பியதுதான் பெரிய விஷயம். நான் தடுத்திருந்தால், அவர் அத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டுமென்று மனதில் கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால், எனக்கு எவ்வளவு உண்மையும், தன்னம்பிக்கையும் இருக்கிறதென்று நான் 
உரிமை கொண்டாடிக் கொள்கிறேனோ அந்த குணங்கள் என் தோழர்களுக்கும் உண்டு என்பதை நான் ஒப்புக் கொள்வேன்.
நம்முன்புள்ள அரசியல் பிரச்னைகளைப் பற்றிய மனப்பான்மையில், நாங்கள் ஒருவரிடமிருந்தொருவர் பிரிந்து வெவ்வேறு பாதைகளில் போய்க் கொண்டிருக்கிறோமென்பதை நான் நீண்ட நாட்களாகவே அறிவேன். அவருடைய நிலைமை அஹிம்சையிலிருந்து மாறுபட்டதென்று சொல்லுவதை அவர் அனுமதிப்பதில்லை. தன்னுடைய அஹிம்சைதான் இத்தீர்மானத்தில் கொண்டு விட்டிருக்கிறதென்று அவர் சொல்லுவார். அளவுக்கு மீறி அஹிம்சையைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதால் எனக்கு அந்தப் பித்து பிடித்துவிட்டதாக அவர் சொல்லுகிறார். 
வார்தாவில் காரியக் கமிட்டியை என் பக்கமாகத் திருப்ப முடியவில்லை. ஆகையால் நான் பொறுப்பிலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டேன். என்னுடைய நிலைமை ஒப்புக்கொள்ளக் கூடியதாயில்லையென்றால், ராஜாஜி சொல்லுவது தான் சரியான வழி என்று எனக்கு அப்போதே நிச்சயமாய் தெரிந்துவிட்டது. ஆகையால் அந்த முயற்சியை விடவேண்டாமென்று அவருக்கு ஊக்கமளித்தேன். இருந்தாலும், கடைசி வரையில் அவர் சொல்லுவது தவறு என்றே சொல்லி வந்தேன்.

தினமணி (09-07-1940)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com