இந்தியா மந்திரிக்கு மகாத்மா காந்தி எச்சரிக்கை

பிரிட்டிஷ் பார்லிமெண்டில், சமீபத்தில் ஸ்ரீ. ஸோரென்ஸன் கேட்ட மிகவும் பொருத்தமான ஒரு கேள்விக்கு ஸ்ரீ. அமெரி அளித்த பதில்
இந்தியா மந்திரிக்கு மகாத்மா காந்தி எச்சரிக்கை

சட்டமறுப்பு என்ற தலைப்பின் கீழ் மகாத்மா காந்தி எழுதியிருக்கும் கருத்து இதுவே. கட்டுரையின் முழு வாசகம் பின் வருமாறு:-
பிரிட்டிஷ் பார்லிமெண்டில், சமீபத்தில் ஸ்ரீ. ஸோரென்ஸன் கேட்ட மிகவும் பொருத்தமான ஒரு கேள்விக்கு ஸ்ரீ. அமெரி அளித்த பதில் மிகவும் வருந்தத்தக்க துரதிருஷ்டவசமான பதிலாகும். இந்தியாவின் நிலைமை எவ்வளவு நெருக்கடி நிரம்பியதாக இருக்கிறது, எவ்வளவு கவலைக்கு ஆஸ்பதமாக இருக்கிறது என்பதை அவர் அறியவில்லையென்பதை காட்டிவிட்டார். 
எனக்குத் தெரிந்த எல்லா நிலவரங்களையும் இப்போது நான் பகிரங்கமாக அவருக்கு அறிவிப்பது முடியாது. அவ்வாறு நான் அறிவித்தால், நான் நேசப்பான்மைக்கு விரோதமாக நடப்பதாக ஆகிவிடும். எல்லா அபாய அறிகுறிகளையும் நான் இப்போது பகிரங்கமாக அறிவிக்க முடியாது. அறிவிக்க துணியவும் மாட்டேன். இப்போது நான் வெளியிடும் எச்சரிக்கையைக்கூட தனி கடிதத்தின் மூலம் அறிவித்திருக்கலாம். நான் அவருக்கு என்ன பதில் அளிக்க வேண்டுமென்று யோசித்து முடிவு செய்வதில் நான் பல நாட்கள் யோசித்து, இதுவரை தாமதப்படுத்தியுள்ளேன். எனக்குத் தெரிந்ததை பகிரங்கமாக வெளியிடாமல் மூடி வைப்பதும், நேசப் பாவத்துக்கு முரணாகும் என்று நான் முடிவு கட்டியுள்ளேன்.
நான் காங்கிரஸிலிருந்து ஒதுங்கி நின்றாலும் இன்னும் பொது ஜனங்களில் பெரும்பகுதியினர், நான் ஆலோசனை கூற வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். அதுபற்றி நான் மனதுக்குள் பெருமையடைகிறேன். சத்யாக்ரஹ உணர்ச்சியை உருவகப்படுத்தி அந்த தர்மத்தின் சார்பாக பேசுவதில் மற்றவர்களைவிட நான் சரியான பிரதிநிதி என்று பொது ஜனங்கள் நம்புகிற வரையில் அவர்கள் என்னிடமிருந்து யோசனையை எதிர்பார்க்கத்தான் செய்வார்கள்.


தினமணி (04-08-1940)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com