சீனாவுக்கு மகாத்மா காந்தி செய்தி

அகில சீன ஜனப்பிரதிநிதி சபையின் மெம்பரான டாக்டர் டவோ (ஹாங்கோ) சமீபத்தில் காந்திஜியை பேட்டி கண்டார். அது பற்றிய விவரங்கள் இன்றைய ஹரிஜன் பத்திரிகையில்
சீனாவுக்கு மகாத்மா காந்தி செய்தி


அகில சீன ஜனப்பிரதிநிதி சபையின் மெம்பரான டாக்டர் டவோ (ஹாங்கோ) சமீபத்தில் காந்திஜியை பேட்டி கண்டார். அது பற்றிய விவரங்கள் இன்றைய ஹரிஜன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. கொஞ்ச காலமாக காந்திஜி மெளன விரதம் அநுஷ்டித்து வருவதால் டாக்டர் டவோவின் கேள்விகளுக்கு, மகாத்மா காகிதத்தில் பதிலெழுதிக் காட்டினார்.
சீனாவுக்கு ஒரு செய்தி கொடுக்க வேண்டுமென்று டாக்டர் டவோ கேட்டார். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சீனா இப்போது யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், மற்றபடி தாங்கள் அஹிம்ஸை முறைப்படியே இருப்பதாகவும், ஜப்பானியர்களிடம் தங்களுக்கு விரோதம் கிடையாதென்றும் டாக்டர் டவோ கூறினார். மே 20‰ யன்று இருபது சீன விமானங்கள் ஜப்பானிய நகரங்கள் மீது பறந்தபோது, தாங்கள் விரும்பியிருந்தால் குண்டுகளை வீசியிருக்க முடியுமென்றும், அப்படி செய்யாமல் துண்டுப் பிரசுரங்களை மாத்திரம் போட்டதாகவும் டாக்டர் டவோ கூறினார்.
காந்திஜி பின் வருமாறு எழுதிக் கொடுத்தார்:
உண்மையான நெருக்கடி வரும் போது, நீங்களாக விதித்துக் கொண்டிருக்கும் இந்த கட்டுப்பாடும் அடக்கமும் நிலைக்காது. பதிலுக்கு பதில் செய்ய வேண்டுமென்ற ஆசையை விடுவது சிரமமாயிருக்கும். அப்படி ஏற்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அது தவிர்க்க முடியாதது. யுத்தத்தில் அன்பு என்பது கிடையாது. ஒன்று பரிபூரண அஹிம்ஸை இருக்க வேண்டும் அல்லது பரிபூரணமான பலாத்காரம் இருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தாக வேண்டும். இந்த செய்தி போதாதா?

தினமணி (27-08-1938)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com