ராஜாஜிக்கு காந்திஜி பரிபூரண ஆதரவு

"காங்கிரஸ்காரர்கள் உஷார்' என்ற தலைப்பின் கீழ், இன்றைய "ஹரிஜன்' பத்திரிகையில் மகாத்மா காந்தி பின்வருமாறு எழுதுகிறார்
ராஜாஜிக்கு காந்திஜி பரிபூரண ஆதரவு

"காங்கிரஸ்காரர்கள் உஷார்' என்ற தலைப்பின் கீழ், இன்றைய "ஹரிஜன்' பத்திரிகையில் மகாத்மா காந்தி பின்வருமாறு எழுதுகிறார்:
 ஸ்ரீ ராஜகோபாலச்சாரியும், நானும் எப்படி பழகுகிறோமென்பது அவர்களுக்குத் தெரியும்.
 ஏற்றுக்கொண்டுள்ள சத்தியத்தையும், அகிம்ûஸயையும் தங்கள் வாழ்வின் தர்மமாகக் கொண்டுள்ளோர் பலர் இருக்கின்றனர். அவர்களில் என்னை எதிர்ப்போரில், ராஜாஜியைப்போல் என்னை அவ்வளவு தீவிரமாக எதிர்ப்போர் வேறு யாரும் கிடையாது. ஆனால், ஒரு சோல்ஜருக்கு வேண்டிய முக்கியமான குணம் ஒன்று அவரிடம் இருக்கிறது. சத்யாக்ரஹத்திற்கு முதலில் நானே ஜெனரல் ஆனேன். 1906ல் அதனுடைய முதல் சோல்ஜரும் நானே. சத்யாக்ரஹத்திற்கு நானே முதல் சோல்ஜர் என்று இந்தியாவில், 1918ல் நான் அறிவித்தபோது, ஆரம்பத்திலேயே அதில் சேர்ந்தவர்களில் ராஜாஜியும் ஒருவர். ஏப்ரல் 6‰ ஹர்த்தால் நடத்த வேண்டுமென்ற எண்ணம் உதித்ததும் அவருடைய வீட்டில்தான்.
 அவர் ராஜிநாமா செய்ய வேண்டியிருந்தால், சட்டபூர்வமான முறையில் செய்வார்; ஒன்றும் ஆர்ப்பாட்டம் இராது; புகார் எதுவும் இராது. அவருடைய புத்திசாலித்தனத்திலும், நேர்மையிலும் எனக்கு அளவு கடந்த நம்பிக்கை உண்டு. காங்கிரஸ்காரர்களிடையே, பார்லிமென்டரி விவகாரங்களில் அவரை மிஞ்சுபவர்கள் கிடையாதென்பதும் என் நம்பிக்கை. அவர் பல பெரிய காரியங்களை சாதித்திருக்கிறார். அவர் சட்டபூர்வமான சாக்கடையில் விழுந்து உழன்று கொண்டிருக்கிறார் என்று யாராவது நினைத்தால் அது பெரிய தவறு.
 அவருக்கு பதவியில் ரொம்ப ஆசை ஏற்பட்டுவிட்டதால், சரியான காரியங்களை செய்ய பயப்படுகிறார் என்று காங்கிரஸ்காரர்கள் சொல்லும்போது என் மனது புண்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com